Vettri

Breaking News

78 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!




 மாத்தறை (Matara) - ஊறுபொக்க பிரதேசத்தில் குளவிகொட்டுக்கு இலக்காகி 78 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை ஊறுபொக்க பட்டிகல பேர்சி அபேவர்தன வித்தியாலயத்தில் இன்று (30) குளவிகொட்டுக்கு இந்த 78 மாணவர்கள் இலக்காகி உள்ளனர்.

இவர்கள் ஊறுபொக்க ஈகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் 8 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சில மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவிகொட்டுக்கு இலக்காகி 78 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | 78 Students In Hospital After Being Hit By Wasps 

சம்பவம் தொடர்பில் ஊறுபொக்க காவல்துறையினமேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments