உணர்வு பூர்வமாக இடம்பெற்ற வீரமுனைப் படுகொலையின் 34 வது வருட நினைவேந்தல் நிகழ்வு!!
உணர்வு பூர்வமாக இடம்பெற்ற வீரமுனைப் படுகொலையின் 34 வது வருட நினைவேந்தல் நிகழ்வு
( வி.ரி.சகாதேவராஜா)
1990 இல் இடம்பெற்ற வீரமுனைப் படுகொலையின் 34 வது வருட நினைவேந்தல் நிகழ்வு
வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயமுன்றலில் மிகவும் உணர்வு பூர்வமாக நேற்று (12) திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்
பூ. பரமதயாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சோ. புஸ்பராஜா,
காரைதீவு முன்னாள் பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் உள்ளிட்ட ஆலய உறுப்பினர்கள் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இம் மிலேச்சத்தனமான படுகொலை 1990 ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி வீரமுனை ஆலயத்தினுள் வைத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments