Vettri

Breaking News

நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு 3இடங்களில் மதுபான உரிம பத்திரம்- தயாசிறி ஜயசேகரகுற்றச்சாட்டு




 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்கும் வகையில் அவருடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு(velu kumar) திகன, அனுராதபுரம் , யாழ்ப்பாணம், ஆகிய இடங்களில் மதுபான உரிம பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara) குறிப்பிட்டார்.

நேற்று(17) இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்

அண்மையில் ஜனாதிபதியோடு இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு திகன, அனுராதபுரம் , யாழ்ப்பாணம், ஆகிய இடங்களில் மதுபான உரிம பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றை 5 கோடி வீதம் 15 கோடி க்கு அவர் விற்பனை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தயாசிறியின் இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மறுத்துள்ளார்.

தயாசிறி சொல்வது போல் இலங்கையில் எந்த ஒரு மூலையிலாவது எனக்கு மதுபான உரிம பத்திரம் இருக்குமாக இருந்தால் எனது நாடாளுமன்ற உறுப்புரிமையை விட்டு விலக நான் தயாராக இருக்கின்றேன். அதனை தயாசிறி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர் முன்வைத்த கூற்றை ஏற்று முதுகெலும்பு உள்ளவராக நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவாரா என அவர் சவால் விடுத்தார்.





No comments