Vettri

Breaking News

சுவாமிநாதர் தம்பையா அடிகளாரது 29ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!






( வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தை ஸ்தாபித்த  ஸ்தாபகர் இறை பணிச்செம்மல் சுவாமிநாதர் தம்பையா அடிகளாரது 29ஆவது நினைவு தினம் நேற்று முன்தினம் அதன் தற்போதைய பணிப்பாளர் கண.இராஜரெத்தினம்( கண்ணன்) தலைமையில் நடைபெற்றது.

அச்சமயம், குருகுலத்தினுடைய பொருளாளரும், திருக்கோவில் வலயக்கல்வி  அலுவலகத்தின் திருக்கோவில் கோட்டக் கல்வி பணிப்பாளருமான சோமசுந்தரம் ரவீந்திரனின் ஓய்வு பெறும் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் இடம்பெற்றது.

 விநாயகபுரம் குருகுலத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்விலே திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார்  , மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முன்னாள் அதிபர் வே. லட்சுமிசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலை வணிகத்துறை பீடாதிபதி நீ. லோகேஸ்வரன்  ஆஞ்சநேயர் நிறுவனத்தின் பிரதிநிதியும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 அறநெறி ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  நன்றியுரை குருகுலத்தினுடைய பொதுச்செயலாளர் பா. சந்திரேஸ்வரன்  நிகழ்த்தினார்.

No comments