" செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கை வாழ் இளைஞர் சமூகத்திற்கான விடிவு நாளாக அமையும்;
(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இளைஞர்களை ஒரு போதும் புறக்கணித்து செயற்பட்டதில்லை, இளைஞர்கள் தொடர்பில் அவரது கனவு மிகப் பெரியது"
முடியும் ஸ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் (25)இடம்பெற்ற இளம் தொழில் முனைவோருடனான கலந்துரையாடல் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் யூ.கே.ஆதம்லெப்பை அவர்கள் மேற்கொண்டவாறு உரையாற்றினார்.
சீரழிந்து சின்னாபின்னமான எமது நாட்டை மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலைக்கு மிகவும் குறுகிய காலத்தில் சீர் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக அமர்த்த வேண்டிய பொறுப்பு இளம் தொழில் முனைவோரின் கைகளில் தங்கியுள்ளது.என்று தெரிவித்தார்.
No comments