Vettri

Breaking News

இரண்டாயிரத்து இருபத்தி நான்கு (2024) கல்வியாண்டுக்கான முதலாம் தவணைப் பரீட்சையில் இடம்பெற்ற வினாத்தாள்கள் ஆவண வடிவில் கையளிப்பு






(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) 2024ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணைப் பரீட்சை கடந்த 2024, ஜுன் மாதம் இடம்பெற்றது.

முதலாம் தவணைப் பரீட்சை வினாத்தாள் தரம் ஆறு தொடக்கம் பதினொன்று வரையான அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய (இரு மொழி) பரீட்சை வினாத்தாள் புத்தகத்தை கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களிடம்  உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு   மதீப்பீடு மற்றும் பரீட்சை பிரிவுக்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எச். நதீரா தலைமையில் அதிபர் காரியாலயத்தில் இடம் பெற்றது.

மேற் குறித்த செயற்திட்டமானது கல்லூரியின் அதிபரின் பணிப்புரையின் கீழ் பரீட்சை பிரிவினால் வடிவமைக்கப்பட்டதுன் தற்காலத்திலும் எதிர்காலத்திலும் கற்கும் மாணவிகளின் கல்வி நடவடிக்கைகளை நவீனமயப்படுத்துவதற்கும் 
மேலதிக பயிற்சிக்கு உதவும் வகையில் கல்லூரி வாசிகசாலைக்கு  மூன்று பிரதிகளும் ,பரீட்சை பிரிவு மற்றும் கல்லூரி நிருவாகம் ஆகியவற்றுக்கு என தலா ஒரு பிரதி அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நூலக பொறுப்பாளர், பரீட்சை பிரிவின் குழு அங்கத்தவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments