திருகோணமலை நோக்கிச் சென்ற லொறியுடன் காட்டு யானை மோதுண்டதில் 15 வயதுடைய பெண் யானை பலி!!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறியுடன் காட்டு யானையின்று மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் அலுவலக உத்தியோஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (9) அதிகாலை திருகோணமலை தபலகமுவ பிரதேசத்தில் விபத்தை ஏற்படுத்திய லொறியை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யானை சுமார் 15 வயதுடைய பெண் யானை என அடையாளம் காணப்பட்டதுடன், கந்தளாய் லஹபத்த காட்டுப்பகுதியில் வசித்து வந்த யானை வீதியை கடக்கும் போது இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் காரியாலய பாதுகாப்பு அதிகாரி எஸ்.ஏ.பீ.கே.நந்தசேன தெரிவித்துள்ளார்.
இவ் விபத்து தொடர்பாக வனவிலங்கு திணைக்களம் மற்றும் அக்போபுர பொஸிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றது.
No comments