வட மாகாண 12 வயதிற்குற்பட்ட விளையாட்டு போட்டியில் மன்னார், நானாட்டன் கல்லூரி மாணவி சாதனை
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் மன்னார்,நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 12 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 100 மீற்றர், 60 மீற்றர் மற்றும் உயரம் பாய்தல் போன்ற மூன்று நிகழ்வுகளில் முதலாம் இடத்தை பெற்று, மூன்று தங்கப் பதக்கங்களை வென்று மன்னார்,நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி ஆன் ஸைதின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 13 வலயங்களைச் சேர்ந்த 1094 மாணவர்கள் பங்கேற்ற மேற்படி விளையாட்டுப் போட்டியில் 12 வயதுக்கு உட்பட்ட வட மாகாண ரீதியாக சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட மன்னார், நானாட்டான் டிலாசால் கல்லூரி மாணவி ஆன் ஸைதின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றியீட்டிய மாணவிக்கான பாராட்டு நிகழ்வின் போது பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இக் கல்லூரி பழைய மாணவன் அன்டன் வழங்கிய புறப்பாட்டு மிதி பலகையினை (Starting block) பாடசாலைக்கு கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
No comments