Vettri

Breaking News

காரைதீவில் கல்விச் சாதனையாளர்கள் 100 பேர் பாராட்டிக் கௌரவிப்பு!




 காரைதீவில் கல்விச் சாதனையாளர்கள் 100 பேர் பாராட்டிக் கௌரவிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) 


காரைதீவில் கல்விச் சாதனையாளர்கள் 100 பேர் தங்கப்பதக்கம் அணிவித்து, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


இக் கௌரவிப்பு  விழா, சித்தருள்சித்தர் ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 73 ஆவது குருபூஜையும், அன்னதானமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11)  நடைபெற்ற பிறகு, அன்று மாலைஆலய பரிபாலன சபை தலைவர் சி.நந்தேஸ்வரன் தலைமையில் சித்தானைக்குட்டி கலையரங்கில் நடைபெற்றது.


சிறப்புரையை சிரேஸ்ட ஊடகவியலாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா வழங்கினார்.


இவ் விழாவில் கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 6 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள், க.பொ.த.சா.தரப் பரீட்சையில் 9 ஏ சித்தி பெற்ற மாணவர்கள், மற்றும் உயர்தரப் பரீட்சை சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர்கள் என 100 மாணவர்கள் சித்தானைக்குட்டி கலையரங்கத்தில் பகிரங்கமாக பதக்கம் அணிவித்து பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.


விழாவில் அதிதிகளாக கலந்து சிறப்பித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா மன்னார் மாவட்ட பிரதம பொறியியலாளர்  ரி. சுரேந்திரகுமார் உதவிக் கல்விப்  பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா 

உள்ளிட்ட அதிபர்கள் பிரதி அதிபர்கள் எனப்பலர் கலந்து கொண்டு இப் பாராட்டினைவழங்கி வைத்தார்கள்.

ஆலய பரிபாலன சபை செயலாளர் இ.விஜயரெத்தினம் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆகியோர் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
















No comments