Vettri

Breaking News

'SLMC CUP - 2024' உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணம் ஆரம்ப நிகழ்வு!!






ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூதூர் மத்திய குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட SLMC CUP - 2024 உதைபந்தாட்டப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (15) மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் கலந்துகொண்டதுடன், அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி லாஹீர், மத்திய குழுத் தலைவர் ஜவாத், செயலாளர் பஷ்ரி ஆசிரியர் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

No comments