வன்னி விழிப்புலனற்றோர்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைப்பு!!
( வி.ரி.சகாதேவராஜா)
வன்னி விழிப்புலனற்றோர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினுடாக ஒரு தொகுதி உலருணவுப் பொதிகள் இன்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய தினம் தனது பிறந்தநாளினை கொண்டாடும் ஒந்தாச்சி மடத்தினைச் சேர்ந்த கஜேந்திரன்,ரஞ்சினி அவர்களின்
அன்பு குழந்தைகளான
க.திபிஷா, க.திபிஷன் க..தியான் ஆகிய
மூன்று குழந்தை களின் 04வது பிறந்த தினத்தை (29/07/2024 இன்று)
முன்னிட்டு அவுஸ்ரேலியாவில் வசிக்கும் மாமா அவர்களினால் இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சியில் இயங்கி வரும் வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தை சேர்ந்த அதி கஸ்ரத்தில் வாழ்ந்து வரும் (30)குடும்பங்களை தெரிவுசெய்து, ஒருவருக்கு (ஐந்தாயிரம் ரூபா5000/=) பெறுமதியான,உலர் உணவு பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இணைந்த கரங்கள் சார்பாக காந்தன், விவேக் ஆகியோர் கலந்துகொண்டு அவர்களுக்கு இதனை வழங்கி வைத்தனர்.
No comments