Vettri

Breaking News

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் பொலிஸ் சார்ஜென்ட்!!




 அநுராதபுரத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



அநுராதபுரம் – ருவன்வெலி மஹா சாயவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே நேற்றிரவு (10) அவரின் சேவைக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் 55 வயதுடைய பொலிஸ் சார்ஜென்ட் எனத் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments