Vettri

Breaking News

கல்முனையில் உலக கை கழுவுதல் தின நிகழ்வு!!







( வி.ரி. சகாதேவராஜா)

உலக கைகழுவுதல்
 தினத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பான நிகழ்வு இன்று (24.07.2024) புதன்கிழமை காலை 10 மணிக்கு இடம் பெற்றது .

இந்நிகழ்வு வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் எஸ் எல்.தாஹிரா  தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு  வைத்திய  அதிகாரி டாக்டர் ஜே.மதன் ,தாதிய பரிபாலகர்கள் மற்றும் பொறுப்பு தாதிய உத்தியோகத்தரகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தாரகள்.

இந் நிகழ்வினில் பிரதி பணிப்பாளர் டாக்டர் தாஹிராவின் தலைமை உரையுடன் ஆரம்பித்து வைத்தியசாலையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு  வைத்திய  அதிகாரி டாக்டர் மதன்   சிறப்பு விரிவுரை வழங்கினார் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான செய்முறைப் பயிற்சி  வழங்கப்பட்டது.

No comments