சம்பளத்தை அதிகரித்தால் வரியையும் அதிகரிக்க நேரிடும்!!
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டுமாயின், தற்போதைய 18 வீத பெறுமதி சேர் வரியை 20 வீதம் தொடக்கம் 21 வீதமாக அதிகரிக்க நேரிடும் எனவும் அரசாங்கத்தினால் அத்தகைய கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்தார்.
அரச சேவை தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் திறைசேரி செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையுடன் தொடர்புடைய பல தொழிற்சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்துள்ள தொழில்சார் நடவடிக்கை தொடர்பில் இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதுடன், தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது
No comments