கிணற்றில் சிறுமியின் சடலம் : வெளியே மயங்கிய நிலையில் தாயார் : அதிர்ச்சியில் மக்கள்
கேகாலை (Kegalle) ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள கிணற்றில் 4 வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்மை அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவமானது, இன்று (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கிணற்றுக்கு அருகில் பேச்சு குறைபாடுள்ள அவரது தாயார் மயங்கி கிடந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
லதிக விசாரணை
அந்தவகையில், தெவ்மி அமயா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவன்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments