தங்க நுழைவாயிலில் தீர்த்தோற்சவம்!!
( வி.ரி. சகாதேவராஜா)
கதிர்காமத்தில் மாணிக்க கங்கைநதி தீரத்திலே அழகாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக பல லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்கநுழைவாயில் ஊடாகச் சென்று நாளை(22) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெற உள்ளது.
இதற்காக லட்சோப லட்சம் மக்கள் அங்கு ஒன்றுகூடியுள்ளனர். மக்கள் வெள்ளம் அங்கு அலைமோதுகிறது.
கதிர்காம தேவாலய நிலமே திஷான்
குணசேகர தலைமையில் இம் முதல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மிகவும் அழகாக நிரு மாணிக்கப்பட்டுள்ள இந்த நுழைவாயிலூடாக யானைகள் சகிதம் பேழை எடுத்து செல்லப்பட்டு நீர் வெட்டு ( தீர்த்தோற்சவம்) இடம் பெறும்.
No comments