Vettri

Breaking News

அமைச்சர் ஜீவன் தொண்டமான் கைது!!!




 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்  ஜீவன் தொண்டமான் உட்பட பல சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த, நுவரெலியா பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நுவரெலியா  - பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அவரின் ஆதரவாளர்கள்  அத்துமீறி உள் நுழைந்த சம்பவம்  தொடர்பாக களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்தினரால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைய திங்கட்கிழமை (22) அன்று குறித்த வழக்கு , நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அமைச்சர்  ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினரை கைது செய்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 


No comments