சீருடைத் துணிகளை இலவசமாக வழங்குவதற்கு சீனா இணக்கம்!!
பாடசாலை மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சீருடைத் துணிகளை முழுமையாக இலவசமாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்துக்கு ஆறு பில்லியன் ரூபாவை சேமிக்க முடிந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தேவையான துணிகள் குறித்து அறிவிக்கப்பட்ட பின்னர் தேவையான அளவு துணியை நாட்டுக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என்றார்.
மேலும்இ அடுத்த ஆண்டு முதல் ஆரம்ப வகுப்புகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தி வேறு சில வகுப்புகளுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.
No comments