Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேசத்தில் பனம்பொருள் கைப்பணி உற்பத்திகள் ஊக்குவிப்பு பயிற்சி நெறி!!







( வி.ரி. சகாதேவராஜா)

புலம்பெயர் உறவுகளின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட சங்கமன் கிராமத்தில் பனம் பொருள் கைப்பணி உற்பத்திகள் மூலமாக வாழ்வாதாரத்தினை உயர்த்தும் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 சங்கமன் கிராமத்தில் 40 பயனாளர்களுடன்  
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் ஏற்பாட்டிற்கமைய 
இவ் வாழ்வாதார பயிற்சிநெறியானது இன்றுவரை மிகவும் முன்னேற்றகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

 இதேபோன்று ஏனைய சில கிராமங்களிலும் இத்தகைய பயிற்சி நெறி எதிர்காலத்தில் ஆரம்பிக்கபடவுள்ளது.

இவ் வாழ்வாதார பயிற்சிநெறியானது 2 மாத கால எல்லையினை கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments