பெருவிளையாட்டு போட்டிகளில் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சாம்பியன்!!!
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலய விளையாட்டு போட்டியின் பெருவிளையாட்டு போட்டிகளில் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்று சாம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.
நான்கு போட்டிகளில் சாம்பியனும் ஒரு போட்டியில் ரன்னஸ்அப் இடத்தினையும் பெற்று வெற்றி வாகை சூடியது.
பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கே .எல்.எம் ஸகி அனைத்து போட்டிகளுக்குமான பயிற்சியை இரவுபகல் பாராமல் வழங்கியிருந்தார்.
இதற்கான வெற்றிக் கிண்ணம் கடந்த வாரம் நடைபெற்ற வலய விளையாட்டு விழாவில் வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் வித்யாலய அதிபர் எஸ். இளங்கோபனிடம் வழங்கி வைத்தார்.
கரப்பந்தாட்டம் 16 வயதுக்குட்பட்ட மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கானத போட்டியில் முதலிடத்தையும் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான போட்டியிலே ரன்னஸ்அப் இடத்தையும் மற்றும் உதைபந்தாட்ட போட்டியில் 17 மற்றும் 20க்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலிடம் பெற்றது.
இதனை விட மாகாணமட்ட போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாகாணமட்ட போட்டிகளுக்கு மேசைப் பந்தாட்டம் 16 வயது ஆண் பெண். மற்றும் இருபது வயது ஆண் ரக்பி என்பன மாகாணமட்ட போட்டிகள் பங்கு பற்றவுள்ளது.
பயிற்றுவிப்பாளர் ஸகி மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் நன்றிகளையும் தெரிவிப்பதாக அதிபர் இளங்கோபன் தெரிவித்தார்.
பெருவிளையாட்டு போட்டிகளில் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சாம்பியன்!!!
Reviewed by Thanoshan
on
7/15/2024 12:02:00 PM
Rating: 5
No comments