Vettri

Breaking News

மன்னார் மருதமடு இயக்குனர் விபத்தில் பலி!!




(செய்தியாளர்) 07.07.2024

மன்னார் மறைமாவட்டத்தின் மருதமடு சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்பணி கீ.ஜொனார்த்தன் கூஞ்ஞ அடிகளார் (வயது 31) விபத்துக்கு உள்ளாகி அகால மரணமாகியுள்ளார்.

இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (07.07.2024) மாலை 7 மணியளவில் தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் தலைமன்னார் பொலிஸ் பிரிவில் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பாக ஆரம்ப விசாரானையில் தெரியவருவதாவது மரணத்தை தழுவிக் கொண்ட அருட்பணியாளர் சம்பவம் அன்று அவரின் சொந்த கிராமமாகிய தலைமன்னார் கிராமத்தில் திவ்விய நற்கருணை விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு கடல் மற்றும் மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்களை ஆசீர்வதித்த சடங்குகளில் கலந்து கொண்ட பின் தலைமன்னாரிலிருந்து மன்னாருக்கு குருமடத்துக்கு திரும்பிச் சென்றபொழுதே இவச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கட்டாக்காளி கால்நடை வீதிக்கு குறுக்கே பாய்ந்தபோதே இவ் அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப விசாரனையில் தெரிய வந்துள்ளது.

இவர் விபத்து நடந்த இடத்திலேயே மரணத்தை தழுவிக் கொண்டதாகவும் இவர் வீதியில்

No comments