திருக்கோவிலில் களைகட்டிய வெள்ளி திருவிழா!!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி சித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மகோட்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை கரவாகுப்பற்று மக்களின் பூஜை ஆலயத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
வெள்ளிக்கிழமை பகல் திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள் .
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் சாமி குருக்கள் ஆலய குரு சிவ ஸ்ரீ அங்குசநாதர் குழுக்கள் முன்னிலையில் ஆலய வண்ணக்கர் வ.ஜயந்தன் சகிதம் மேளதாளத்தோடு மிகவும் சிறப்பாக இந்த திருவிழா நடைபெற்றது
No comments