Vettri

Breaking News

"தாம் தொழிற்சங்கப் போராட்டத்தில் பங்கேற்க போவதில்லை" -இலங்கை தாதியர் தொழிற்சங்கம் தெரிவிப்பு!!




 அரச சேவை தொழிற்சங்கங்கள் இரண்டு தினங்களுக்கு முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்தில், தமது தொழிற்சங்கம் பங்கேற்கமாட்டாதென, அகில இலங்கை தாதியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பி மெதிவத்த இது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில்; சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதால் நோயாளிகளே பாதிப்புகளை எதிர் நோக்க நேரும் என குறிப்பிட்டுள்ளார்.

அரச சேவை தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை மேற்கொண்டு, இரண்டு தினங்களுக்கு பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளன. இந்த போராட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை என அகில இலங்கை தாதிமார் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட போதும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான காலம் இதுவல்ல.

இந்த உறுதியான நிலைப்பாட்டில் தமது தொழிற்சங்கம் உள்ளதாகவும் அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments