Vettri

Breaking News

பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையை மீளமைக்கும் திட்டம்!!





மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் மகிழடித்தீவு மற்றும் முதலைக்குடா கிராம சேவகர் பிரிவுகளை அண்டிய நிலப்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இறால் பண்ணையை மீளமைக்கும் திட்டத்தில் சிறிய அளவிலான முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக  ஆராயும் கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா  முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 குறித்த இறால் வளர்ப்பு பண்ணைக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட போதிலும், சுற்றாடல் அதிகார சபை மற்றும் நெக்டா நிறுவனத்தினுடைய அனுமதிகளை பெற்றுக் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக நீண்டகாலமாக இவ்விடயம் நடைமுறைப்படுத்தப்படாமல் காணப்படுவது தொடர்பில் ஆராந்திருந்ததோடு, இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சவால்கள், சிறிய அளவிலான முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இத்திட்டத்தை அமுல்படுத்துவதில் காணப்படும் ஏனைய காரணங்கள் உட்பட நெக்டா நிறுவனத்தின் நடைமுறை சிக்கல்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திரு. சுதாகரன், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. ரவிக்குமார், மாவட்ட அபிவிருத்தி குழுவிற்கான எனது பிரத்தியேக செயலாளர் தம்பி தஜிவரன் உட்பட துறைசார் அதிகாரிகள் பயனாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments