தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும்!!
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாகவே தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தபால் திணைக்களம் ஆரம்பிக்கும் என, பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தபால் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பிரதி தபால் மாஅதிபர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த வகையில் வாக்காளர் அட்டை பத்திரங்களை வீடுகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 8,000 ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தபால் வாக்களிப்புக்காக உரிய அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தபால் திணைக்களம் பொறுப்பேற்று மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments