Vettri

Breaking News

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது





 பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 29 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின் இந்த சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலை சேர்ந்தவர் என கைதான நபர் 39 வயதுடையவர் ஆவார். 

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 2,379 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

No comments