மாகாணமட்ட மேசைப்பந்தாட்ட தொடரில் வெற்றிவாகை சூடியது முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயம்!!
கிழக்குமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் அதன் ஒரு அம்சமான மேசைப்பந்தாட்ட போட்டியானது அனைத்து வயதுப் பிரிவினருக்கும் நேற்றும் இன்றும் திருகோணமலையில் இடம்பெற்றிருந்தது. இவ் மாகாண மட்ட போட்டிகளில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் சார்பாக பங்கு கொண்டிருந்த முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலய மேசைப்பந்தாட்ட அணியினர் மீண்டுமொருமுறை தங்களது திறமைகளை திருபித்துக்காட்டியிருக்கின்றனர்
அந்த வகையில் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு மற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு மற்றும் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு என மூன்று வயதுப் பிரிவுகளிலும் முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலய அணிகள் சம்பியனானதுடன் 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர். 20 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பட்ட வீராங்கனைகளுக்கான போட்டியில் M. நிவேதிதா சம்பியனானதுடன் 20 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் K. சுஜிரன் இரண்டாமிடத்தையும் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் முனைக்காடு விவேகானந்த மகாவித்தியாலயத்திற்கும் முனைக்காடு கிராமத்திற்கும் பெருமையினை தேடிக்கொடுத்திருக்கின்றனர்.
மேசைப்பந்தாட்ட விளையாட்டுக்கென தனித்துவமான வசதிகளுடன் பயிற்சிகளை பெற்று பல வசதிகளுடன் இருக்கும் உள்ளக அரங்குகளிலே இரவுபகலாக பயிற்சியினை பெற்று போட்டியில் கலந்துகொண்ட வீர வீராங்கனைகளை ஒரு கஷ்ட பிரதேச பாடசாலையாக இருந்து மேசைப்பந்தாட்டத்திற்கான உள்ளக அரங்கோ தனித்துவமான ஆடுகள மேசையோ இல்லாது பயிற்சிகளை பெற்ற முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய அணி தோற்கடித்திருக்கிறது என்றால் பாராட்ட வேண்டிய விடயமே.
முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலய மேசைப்பந்தாட்ட அணி பாடசாலை மட்டங்களில் மாத்திரமன்றி திறந்த கழகமட்ட போட்டிகளிலும் களம் இறங்கி சாதித்துக்காட்டியிருந்தனர். 48 வது தேசிய விளையாட்டு நிகழ்வில் கிழக்குமாகாண சம்பியனாக தெரிவான முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக் கழகத்திற்காக இவ் அணியே களமாடியதுடன் இவ் அணி தேசிய மட்டப்போட்டியில் முதல் சுற்றில் பலம் மிக்க ஊவா மாகாண அணியை தோற்கடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 வருடங்களுக்கு முன் மேசைப்பந்தாட்ட விளையாட்டை அறிந்திராத இவ் மாணவர்களுக்கு மேசைப்பந்தாட்ட நுட்பங்களை கற்றுக்கொடுத்து தேசிய மட்டம் வரை முனைக்காடு கிராமத்தின் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்து கொண்டிருக்கும் உடற்கல்வி ஆசிரியர் நா. சிறிமுருகன் சேர் அவர்களை இந்த இடத்தில் பாராட்டுவதுடன் மாணவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்கும் வித்தியாலய முதல்வர் மா. யோகேந்திரன் சேர் மற்றும் எமது அணிக்கான ஆலோசனைகளுடன் ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பணிப்பாளர் மதிப்பிற்குரிய Y. ஜெயச்சந்திரன் sir மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வயத்தில் சதுரங்கம் மற்றும் மேசைப்பந்து போன்ற விளையாட்டுக்களை வளர்த்தெடுக்க செயற்பட்டுக்கொண்டிருக்கும் வலயத்தின் திட்டமிடலுக்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் YC. சஜீவன் Sir அவர்களுக்கும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் அனுசியா அத்தோடு மாணவர்களின் வெற்றிக்கு துணைநிற்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்தோடு எமது வித்தியாலயத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டினை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல மேசைப்பந்தாட்ட மேசையினை எமக்காக சொந்த நிதியில் பெற்றுத்தந்த முனைக்காடு கிராமத்தை சேர்ந்த தனபால் அண்ணன் அவர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிறிமுருகன் Sir அவர்களின் மாணவன் அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றிகளை கூறிக்கொள்கிறோம் அவர்களின் ஒத்துழைப்பு இன்றி இன்று இவ்வாறான அணியை கட்டமைத்திருக்க முடியாது இவ் அணி இன்னும் பல வருடங்களுக்கு முனைக்காட்டின் பெயரை தேசிய ரீதியில் நிலைநிறுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இம் முறை முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயம் சார்பாக கலந்துகொண்ட வீர வீராங்கனைகள் வயதுப்பிரிவு அடிப்படையில் இணைத்துள்ளோம்
Under 16 boys
V.Nathushan
S.Yushiyanthan
S.Kavishan
T.Thirishan
Under 16 girls
A.Yathushikka
P.Pirasiniya
P.Kopika
Under 18 boys
K.Sujeeran
P.Kuhenishan
K.Dipanushan
T.Linojithan
N.Rushanthan
A.Paviththiran
Under 18 girls
M.Nivethitha
I.Thanushka
K.Rajithra
தேசிய ரீதியில் சாதிக்க வாழ்த்துக்கள்
கடே கபு
No comments