Vettri

Breaking News

சம்மாந்துறை பிரதேச அறநெறிப் பாடசாலைகளுக்கு அறநெறி நூல்கள் வழங்கி வைப்பு!!







செ.துஜி 

இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச அறநெறிப் பாடசாலைகளுக்கு அறநெறி நூல்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தலைமையில் வீரமுனை சீர் பாத தேவி சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் திருமதி கெளசல்யா உருத்திர மூர்த்தி ஒழுங்கமைப்பில் நடைபெற்ற அற நெறி நூல் வழங்கல் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு அறநெறிப் பாடசாலை க்ஷ சார்ந்த சமய போட்டிகளுக்கு தயார்படுத்தல், புதிய பாடத்திட்டத்திற்கமைய அற நெறி ஆசிரியர்களை பாடங்களை  தயார்படுத்தல் ஆகியன தொடர்பாக மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஆசிரியர்களை தெளிவு படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments