Vettri

Breaking News

சம்மாந்துறையில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் வட்டம் நடாத்திய சேவை நலன் பாராட்டு விழாவும் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பு விழாவும்!!










( வி.ரி.சகாதேவராஜா)

சம்மாந்துறை வலய ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் வட்டம் நடாத்திய சேவை நலன்பாராட்டு விழாவும் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு விழாவும் நேற்று(28) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆசிரியர் எம்.ஏ.எம்.றக்கீப் தலைமையில் சம்மாந்துறை வலய 
ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் இசட்.எம்.றிஸ்வி ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 34 வருடங்கள் கல்வி சேவையாற்றி ஓய்வு பெற்ற சம்மந்துறை வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ .எல். ஏ. கபூர் பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

 அடுத்து கல்வி சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் சம்மாந்துறை வலயத்தில் 25 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றிய தலைவருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மேலும்,கல்வி சேவையாற்றிய முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சபூர்தம்பி, மறைந்த ஆசிரிய ஆலோசகர் அசீஸ்( இறக்காமம்), பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம் .வை.அரபாத் முகைடீன் ,ஏ.எல்.மஜீத், எம்.என்.நாசீர்அலி மற்றும் ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் எஸ்.சிவேந்திரன்  ஆகியோரும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
 மேடையில் முன்னிலை அதிதியாக கலந்து கொண்ட ஆசிரிய ஆலோசகர் றிஸ்வி செயின் விழா பற்றி அழகாக எடுத்துரைத்தார் .


பாராட்டு பெற்ற அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன. சேவை நலன் பாராட்டைப் பெற்ற ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கபூர் ஏற்புரை வழங்கினார்.

சுமார் 300 ஆரம்ப கல்வி ஆசிரியர்கள், வலயக்கல்விப் பணிமனையின் கல்விசார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள்.

No comments