தமிழர் பகுதியில் அரச பேருந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல்
கிளிநொச்சியில் (Kilinochchi) அரச பேருந்து ஒன்றின் மீது மதுபான போத்தலால் நடத்தப்பட்ட தாக்குதலில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (16) மதியம் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி, தாக்குதலானது யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) வவுனியா (Vavuniya) நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்குரிய பேருந்து மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தநிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் தனியார் பேருந்து காப்பாளர் ஒருவரால் மதுபான போத்தல் மூலம் பேருந்துக்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தாக்குதலை மேற்கொண்ட நபர் பொதுமக்கள், பயணிகள், சாரதி மற்றும் காப்பாளரினால் பிடிக்கப்பட்டு கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்தில் மதுபான போத்தலின் கண்ணாடித் துகள்கள் பட்டு பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
அத்தோடு, சாரதி பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதமான ஆபத்தும் வராமல் பாதுகாப்பாக பேருந்தை நிறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், தனியார் பேருந்து குழுவினருடன் ஏற்பட்ட நேர பிரச்சினை காரணமாக இந்த செயல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments