Vettri

Breaking News

மரக்கறி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்




 நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

கனமழையால் காய்கறிகளை அறுவடை செய்து சந்தைக்கு கொண்டு வரமுடியாமல், மழையால் பயிர்கள் சேதமடைவதால் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய,ஒரு கிலோ தக்காளியின் சில்லறை விலை 80 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் சில்லறை விலை 500 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.



அத்துடன் போஞ்சி கிலோ ஒன்றின் விலை 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ வெண்டைக்காய் மற்றும் கரட் சில்லறை விலை 600 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

மேலும், தேங்காய் ஒன்றின் விலை சில பிரதேசங்களில் 140 ரூபாவாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments