Vettri

Breaking News

காரைதீவில் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு இதய அஞ்சலி; பெருந்திரளானோர் பங்கேற்பு!!




 காரைதீவில் இரா.சம்பந்தன் ஐயாவுக்கு இதய அஞ்சலி!!

தமிழ் தேசியத்தின் கொள்கைக்காய் குரல் கொடுத்தவரும்  தமிழ் தேசிய கூட்டமைப்பின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது. தமிழரசுக்கட்சியின் காரைதீவுக்கிளை  செயலாளர் கதிர்காமத்தம்பி  செல்வபிரகாஷின் தலைமையில் காரைதீவில்  இன்று (07) பிற்பகல் 7.30மணியளவில்  இடம்பெற்றது. 

இவ்நிகழ்வில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  கவிந்திரன் கோடீஸ்வரன்,தமிழரசுக்கட்சியின் காரைதீவுக்கிளை உதவிசெயலாளர், கட்சி ஆதரவாளர்கள், மற்றும் பொதுமக்கள்  என பலரும்  கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் சம்பந்தன் ஐயாவின் திருவுருவ படத்திற்கு  மலர் அஞ்சலி செலுத்தி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன் கவீந்திரன் கோடிஸ்வரன் தனது இரங்கல் உரையில் இவ்வாறு தெரிவித்தார்,தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய பெருந்தலைவரை அனைவரும் இழந்து நிற்கின்றோம் அதுமட்டுமன்றி அரசியலுக்கு உள்நுழைந்த காலமுதல் தனது 91வயது வரை அகிம்சை வழியில் போராடி இராஜதந்திர நுட்பங்களை கையாண்ட தலைவர் சம்பந்தன் ஐயா என்றும் ஐயாவின் வெற்றிடத்தை இனி எவராலும் ஈடு செய்ய முடியாது என்ற கருத்தையும் தெரிவித்தார்.அத்துடன்  ஐயாவின் இறுதி மரண நிகழ்வானது அவர் உதித்த திருகோணமலை நகரில் ஞாயிற்றுக்கிழமை(07)இடம்பெறவுள்ளது  எனவும் தெரிவித்தார்.














No comments