Vettri

Breaking News

வேலை நிறுத்தத்தை கைவிட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!!




 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அதிகாரிகள் தமது வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments