மனைவி நல்ல காதலியாக இருப்பதில்லை.. டி இமான் ஓபன் டாக்!!
டி இமான்
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் தான் டி இமான். இவர் விஜய்யின் தமிழன் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அதன் பின் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த டீன்ஸ் படத்திற்கு இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பேசிய இமான், நமக்கு பிடித்த காதலி மனைவி ஆவார் என்பது சந்தேகம் தான். அதே மாதிரி மனைவி நல்ல காதலியாகவும் நமக்குப் பிடித்த காதலியாகவும் இருப்பதில்லை. நமது குழந்தைகள் நம்முடைய செல்வன் என்று வளர்க்கிறோம், இருப்பினும் ஒரு கட்டத்தில் அதுவும் மாறிவிடுகிறது.
நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. அதே போல நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்கள் அமைவதில்லை. இசைத்துறையில் சாதாரண ஒரு கலைஞராக இருந்தாலே போதும் என்று நினைத்தேன். ஆனால், இசையமைப்பாளராக இருக்கும் வாய்ப்பை அந்த கடவுள் கொடுத்துள்ளார் என்று டி இமான் தெரிவித்துள்ளார்.
No comments