டிஜிட்டல் மயமாகும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை!!
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, JICA நிறுவனம் மற்றும் Cyclomax International (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் இணைந்து
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்த விசேட நிகழ்வுக்கு அமைச்சின் செயலாளர்ஏ.சி.எம். நபீல், சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க,JICA நிறுவனத்தின் பிரதான பிரதிநிதி யாமதா டெஸ்டிதுயா (Yamada Tetsduya), Cyclomax International (Pvt) Ltd சபையின் பொது முகாமையாளர் T. பாரதிதாசன் உட்பட அதிகாரிகள் பலர் பங்குபற்றினர்.
No comments