ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!!
ரயிலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் புதன்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயிலில் ஏறியுள்ளதாகவும், அதிக நெரிசலுடன் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் நிலைய அதிபர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் , சில ரயில்கள் மாத்திரமே அதிக பயணிகள் நெரிசலுடன் இயங்கியமை குறிப்பிடத்தக்கது .
No comments