Vettri

Breaking News

மஹியங்கனையில் உறுமய நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வு!!




 உறுமய வேலைத் திட்டம் 2002 ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம். நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அதனை நிறுத்த வேண்டி ஏற்பட்டது எனவும் அன்று அந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், 20 வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு நிரந்தர காணி உறுதி கிடைத்திருக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்

மஹியங்கனை பொது விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற உறுமய நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

20 லட்சம் நிரந்தர காணி உறுதி வழங்கும் ‘உறுமய’ தேசிய திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் தகுதி பெற்ற 65 ஆயிரத்து 393 பேரில் 662 பேருக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடையாளமாக சிலருக்கு காணி உறுதிகளை வழங்கிவைத்தார்.

இத்துடன் இணைந்ததாக பதுளை மாவட்டத்திலுள்ள நான்கு பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்களையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைத்தார். அத்துடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹியங்கனை பொது விளையாட்டரங்கின் பிரதான கேட்போர் கூடத்தையும் திறந்து வைத்தார். 

No comments