Vettri

Breaking News

முப்படையினரின் காணிகளுக்கு உறுதிப்பத்திரம் ஜனாதிபதியால் வழங்கி வைப்பு!!




 முப்படையினர், இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையில் ஊனமுற்ற வீரர்களுக்கும், உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கும் வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளை நிபந்தனையின்றியும் கட்டணங்கள் இல்லாமலும் முழுமையான உரிமையை வழங்குவதற்கான வேலைத்திட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அச்சமின்றி மக்கள் நடமாடுவதற்காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்புத் தரப்பினருக்கு தாய்நாட்டில் காணித் துண்டு ஒன்றின் உரிமையை உறுதிப்படுத்துவதே இந்த வேலைத் திட்டத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி செயலகத்தின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments