வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க காயம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் வாகனம் ஜாவத்தை வீதியில் சலுசல பிரதேசத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நாரஹேன்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில், நாரஹேன்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர், காரின் சாரதி மற்றும் பயணி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினரின் சொகுசு ஜீப் வாகனமும் காரொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
No comments