Vettri

Breaking News

இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்!!




 இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், இன்றைய பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உடல் நலக் குறைவினால் கடந்த வாரம் காலமானார். இதனையடுத்து அவரது பாராளுமன்ற உறுப்புரிமைக்கான வெற்றிடம் நிலவியது. 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 16,770 விருப்பு வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசு கட்சியின் பட்டியலில் சம்பந்தனுக்கு அடுத்த இடத்தினை சண்முகம் குகதாசன் பெற்றிருந்தார்

No comments