பட்டிருப்பில் கட்டாயக்கல்வி வரவுக்குழு பொறுப்பாசிரியர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு!!
செ.துஜியந்தன்
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் கட்டாயக்கல்வி மற்றும் வரவு வீதம் ஆகியவற்றை செயற்படுத்தும் திட்டம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் வழிகாட்டலில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வரவுக்குழு ஆசிரியர்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு வலயக் கல்வி அலுவலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பட்டிருப்பு கல்விவலயத்திலுள்ள 70 பாடசாலைகளினதும் வரவுக்குழு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வளவாளர்களாக முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.தட்சனாமூர்த்தி, முறைசாராக் கல்வி பிரிவு இணைப்பாளர் திருமதி.றீட்டா கலைச்செல்வன், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் பா.துஸ்யந்தன் கலந்து கொண்டனர்.
இங்கு கட்டாயகல்வியினூடாக சரி நிகர்த்தன்மை பேணல் , மாணவர் வரவு வீதத்தை அதிகரித்தல், இடைவிலகலைத் தவிர்த்தல், கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட செயற்பாடுகள்,சுற்றறிக்கைகள், வர்த்தமானி வெளியீடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments