Vettri

Breaking News

திருப்புகழ் மாநாட்டு விருது!!






(வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திர வேலாயுதர் சுவாமி  ஆலய நிர்வாகத்தினர் அங்கு இடம்பெற்ற திருப்புகழ் மாநாட்டுக்கு வழங்கிய மகத்தான ஒத்துழைப்பிற்காக அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்கள் .

கொடியேற்ற தினத்தன்று இந்த விருது திருப்புகழ் மாநாட்டை நடத்திய 3 இந்து அமைப்புகளால் வழங்கப்பட்டது.

 திருக்கோவில் சித்திர வேலாயுதர் சுவாமி ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ்  தலைமையிலான குழுவினர் அந்த விருதை பெற்றுக் கொண்டனர்.

 கொடியேற்ற தினமன்று இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments