தேசிய மட்டத்திற்கு தெரிவானது காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி!!!
கிழக்கு மாகாண விளையாட்டு விழாவானது திருகோணமலையில் நேற்றைய தினம்(26) சிறப்பாக இடம்பெற்றது. இப்போட்டியில் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் பூப்பந்தாட்ட ஆண்கள் அணியானது வலயமட்டத்திலிருந்து மாகாணமட்டத்திற்கு தெரிவாகி 20 வயதிற்குட்பட்ட இறுதி போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகிியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து விபுலானந்த மத்திய கல்லூரி மாணவன் நிதுஷன் தனிநபர் விளையாட்டுப்பிரிவில் 3ம் இடத்தைப்பெற்று பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளார். இவ் பூப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளராகிய வசந்த் அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிளை தெரிவித்தனர்.
No comments