Vettri

Breaking News

பொலிஸ் இலட்சினையுடன் போலிக்கடிதம் சமூக வலைத்தளங்களில்!!




 போலியாக தயாரிக்கப்பட்ட கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பௌத்த தர்ம சக்கரத்துடன் நீல நிறத்தில் பொலிஸ் சின்னம், இறப்பர் முத்திரை மற்றும் மஞ்சள்    நிறத்துடனான பின்னணியில் ” CENTRAL OFFICE FOR THE FIGHT AGAINST CRIME RELATED INFORMATION AND COMMUNICATION_TECHNOLOGY “என்ற தொனிப்பொருளில் 2024 ஜூலை 01 என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனில் விடுக்கப்பட்டதாக விடயம் மறைக்கப்பட்ட முறையில் இந்த கடிதம் தயாரிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடிதம் மற்றும் அதன் உள்ளடக்கம் என்பவை முற்றிலும் போலியாக தயாரிக்கப்பட்ட கடிதம் என்றும் , இலங்கை பொலிஸினாலோ அல்லது அதனுடன் இணைந்த நிறுவனங்களினாலோ  இவ்வாறானதொரு கடிதம் வெளியிடப்படவில்லை என பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.  இதில் ஏமாற வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தயாரிக்கப்பட்ட போலி கடிதம் மற்றும் அந்த கடிதத்தை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


No comments