அல்லு அர்ஜுன் புஷ்பா 2 இயக்குனருடன் சண்டையா? வீடியோவால் அதிர்ச்சியான ரசிகர்கள்
அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் ஆன புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் மேலும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.
படம் தொடங்கியதில் இருந்தே அல்லு அர்ஜுன் நீளமான முடி, தாடி வைத்து ஒரே லுக்கில் தான் இருந்து வந்தார். மேலும் படத்தின் பாடல், போஸ்டர் என அனைத்தும் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது.
சுகுமார் இயக்கத்தில் Pushpa 2: The Rule என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.
அல்லு அர்ஜுன் - இயக்குனர் சண்டையா
இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் சுகுமார் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
அல்லு அர்ஜுன் தனது தாடியை ட்ரிம் செய்துவிட்டு சாதாரண லுக்கில் விமானத்தில் சென்று இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
இன்னும் ஒரு மாதம் ஷுட்டிங் பாக்கி இருக்கும் நிலையில் இப்படி ஏன் நடந்தது? இயக்குனர் உடன் சண்டை போட்டதால் தனது லுக்கை அல்லு அர்ஜுன் மாற்றிவிட்டாரா என இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர். அதனால் புஷ்பா 2 ரிலீஸ் மேலும் தள்ளிப்போகிறதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
No comments