பாண்டிருப்பில் முதியோர்களுக்கான இலவச நடமாடும் சேவை
இன்று (05-07-2024) கல்முனை பாண்டிருப்பு பூரணகேள்வன் சர்வோதய சிரமதான சங்கத்தின் வேண்டுகோளுக்கமைய முதிர் உதவி ( ஹெல்ப் ஏஜ்) தொண்டு நிறுவனத்தினால் இலவச நடமாடும் சேவை பாண்டிருப்பு மத்திய கலாசார மண்டபத்தில் சர்வோதய சிரமதான சங்கத்தின் தலைவர், ஓய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலையியின் வைத்தியர் ராகுலன், சர்வோதய சமூக நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.எச்.எம். பைஸால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்முனை 1A கிராம அபிவிருத்தி சங்கத்தின் இணை அனுசரணையில் நடைபெற்ற இவ் வைத்திய முகாமில் கண்பரிசோதனைக் குழுவினர் , மருத்துவ உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கண் பரிசோதனை, இரத்தப்பரிசோதனை, உயரம், நிறை , இரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனைகள் நடத்தப்பட் பட்டதுடன் மேலதிக சிகிச்சைகள் தேவைப்படுவோர் இனங்காணப்பட்டு அருகிலுள்ள வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டனர். கண் பரிசோதனை செய்தவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments