Vettri

Breaking News

அதிகஷ்டப்பிரதேச மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கிவைப்பு!!








( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தின் அதி
கஷ்டப் பிரதேசத்திலுள்ள  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கல்முனை றோட்டரிக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டன.


மாவட்டத்தில் உள்ள பொத்துவில் இன்ஸ்பெக்டர் ஏற்றம் வித்தியாலயம், றொட்டை அ.த.க.பாடசாலை, கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம், சம்மாந்துறை இஸ்மாயில் வித்தியாலயம், பாணமை அ.த.க.பாடசாலை, சவளக்கடை கணேசா வித்தியாலயம் ஆகிய 
ஆறு பாடசாலைகளின்  475 மாணவர்களுக்கு 2500 அப்பியாசக் கொப்பிகள்  கல்முனை றொட்டரிக்கழகத்தினால் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன.


 கல்முனை றோட்டரி கழகத்தின்  2024/25 வருடத்திற்கான புதிய தலைவர்  பொறியியலாளர்  றொட்டரியன்  என். றதீசன் தலைமையில்  இந்நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் செயலாளர் மு. சிவபாதசுந்தரம் அங்கத்தவர்கள் மு. அமிர்தசங்கர்,க. வினோத் மற்றும் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதற்கான நிதியினை அவுஸ்ரேலிய
 றோட்டரிக்கழகம் கன்பேரா வெஸ்டர்ன் கிறீக் வழங்கியுள்ளது.

No comments