Vettri

Breaking News

பரீட்சை நேர அட்டவணையை புதுப்பிக்க திட்டம்!!




 பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக  கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை  அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியானால்  இது சாத்தியமாகும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

No comments