Vettri

Breaking News

ஸ்வர்ணபுரவர தேசிய விருது - வடக்கு மாகாணம் முதலாமிடம்!!!




ஸ்வர்ணபுரவர தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 20 விருதுகளைப் பெற்று வடக்கு மாகாணம் முதலாமிடம் பெற்றுள்ளதுடன், அதில் வவுனியா நகரசபை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.




பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிறனை மதிப்பிடுவதற்கான ஸ்வர்ணபுரவர தேசிய விருது  வழங்கும் விழாவில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் ஸ்வர்ணபுரவர தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள 276 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட சபைகளின் செயற்றிறன் மதிப்பீட்டின் அடிப்படையில் 62 விருதுகளில் வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்கள் 20 விருதுகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளது.  

வல்வெட்டித்துறை நகரசபை முதலாமிடத்தைப் பெற்று தங்க கேடயத்தையும் பெற்றுக் கொண்டது.

இதன்போது வவுனியா மாவட்டம் 9 விருதுகளைப் பெற்றுக் கொண்டது. அதில் வவுனியா நகரசபை வெள்ளிக் கேடயத்தைப் பெற்றுக் கொண்டதுடன், 5 சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை வெண்கல கேடயத்தைப் பெற்றதுடன், 2 சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டது. 

(வவுனியா தீபன்)

No comments