பரசூட் முறையில் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா!!
( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் நிலையத்திற்குட்பட்ட மணற்பிட்டி கிராமத்தில் பரசூட் முறையில் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று இடம்பெற்றது.
தொழில்நுட்ப உத்தியோகத்தர் துஷாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி நித்தியா நவரூபன் தெற்கு வலய விவசாய போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பரசூட் முறையில் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை அறுவடை செய்யப்பட்டு பயிர்வெட்டு அளவீடு செய்யப்பட்டது. வீசிவிதைத்தலை விடவும் பரசூட் முறையில் அதிக விளைச்சல் கிடைத்ததோடு உற்பத்தி செலவும் குறைவாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இவ்வாறான முன்மாதிரி துண்டச்செய்கைகள் செய்கை பண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments